பிரபல சீரியல் நடிகையான பிரக்யாவுக்கு மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் அதிகம். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். பிரக்யாவின் தந்தை ராணுவத்தில் வேலை பார்த்துள்ளார். இதனால் பிரக்யா அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றுள்ளார்.
ஒரு சில விளம்பரங்களில் பிரக்யா நடித்துள்ளார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் பிரக்யாவுக்கு கிடைக்கவில்லை. இதனால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். லாக்டவுன் நேரத்தில் காதல் என்ற குறும்படத்தில் பிரக்யா நடித்தார்.
இந்த குறும்படம் யூட்யூபில் வெளியானது. இதனை அடுத்து அஞ்சலி என்ற சீரியலிலும் பிரக்யா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. அவரது நடிப்பில் உருவான வரலாறு முக்கியம் திரைப்படத்திலும் பிரக்யா நடித்திருந்தார்.
இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. லோகேஷ் குமார் இயக்கிய எண் 4 திரைப்படத்திலும் பிரக்யா நடித்துள்ளார். ஒரு சிலர் சீரியல்களிலும் பிரக்யா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரக்யா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரக்கியா பங்கேற்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை ரசிகர்கள் வைரலக்கி வருகின்றனர்.
View this post on Instagram