‘விஸ்வரூபம்’ பட நடிகைக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா?… அவரே வெளியிட்ட புகைப்படம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

By Begam on பங்குனி 5, 2023

Spread the love

அமெரிக்காவைச் சேர்ந்த  நடிகை தான் பூஜா குமார். 1995 ல் ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்ற பெருமைக்குரியவர்.

   

அதன் பிறகு பாலிவுட்,  ஹாலிவுட் என கலக்கி வந்தார் நடிகை பூஜா குமார் அவர்கள்.

   

 

இவர் நடிகர் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானார்.

அதன் பிறகு ‘உத்தம வில்லன்’ திரைப்படத்திலும் கமலஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களில் நடிக்கும் பொழுது நடிகை பூஜா குமாரும் நடிகர் கமலஹாசனும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல சர்ச்சைகளிளும் சிக்கினார் நடிகை பூஜா.

அதன் பிறகு ஆங்கில படங்கள், ஹிந்தி படங்கள் என தற்பொழுதும் பிசியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா குமார்.

‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், மீன் குழம்பும் மண்பானையும், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2020ல் பெண் குழந்தை பிறந்தது.

தற்போது நடிகை பூஜா குமார் தனது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது மகளுடன்  அழகான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.