லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் கூலி. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பூஜா ஹெக்டே, ரஜினியின் கூலி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்தபோது அது படத்துடைய வியாபாரத்தை பெரிதுப்படுத்தும் என்று அவர் என்னை மதித்து அழைத்ததற்கு நன்றி. அந்தப் பாடலில் நடனம் ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது.
ஹிந்தி சினிமா துறையில் என்னை வெறும் அழகு சேர்க்கும் கதாபாத்திரங்களுக்காகவே படத்தில் கமிட் செய்கின்றனர். நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததை அவர்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். நான் இந்த இடத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் என்னை சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தில் ருக்மணி என்ற கதாபாத்திரமாக மாற்றினார். அவர் என்னுடைய நடிப்பு ஆற்றலை நம்பினார் என்று பூஜா உருக்கமாக பேசியுள்ளார்.
