பிரபல நடிகையான பூஜா ஹெக்டே தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார்.
தெலுங்கில் ஒக லைலா கோஷம் படத்தின் மூலம் பூஜா அறிமுகமானார். பின்னர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து சுவடு ஜகநாதம் திரைப்படத்தில் நடித்தார். தளபதி விஜய் உடன் இணைந்து பூஜா பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
அதன்பிறகு ராதே ஷ்யாம், ஆச்சாரியார், சல்மான்கானின் கிசிகா பாய் கிசி கி ஜான் படங்களில் பூஜா நடித்தார். தற்போது தேவா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா மும்பையில் 4000 சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலுக்கு அருகில் இருக்கும் அந்த பிரம்மாண்ட வீட்டின் விலை சுமார் 40 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. பூஜாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 70 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.