தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், சைக்கோ, காஞ்சனா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபத்தில் கூட படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பழமொழி திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது நித்யா மேனன் ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கான பிரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நித்யா மேனன், சிறுவயதில் இருந்து டான்ஸ் ஆடு, பாட்டு பாடு என்று கேமரா முன்பாக வந்து தன்னை அம்மா தான் புஷ் செய்வார்.

ஆனால் சினிமா என்றால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. 15 வருடங்கள் சினிமாவை கடந்த கூட போதும் சினிமாவை விட்டு வேறு ஏதாவது பண்ணுறேன். எனக்கு இது பிடிக்கலன்னு பெற்றோர்களிடம் சொல்ல. அவங்க உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுனு என்று சொல்லிட்டாங்க. அந்த அளவுக்கு போன நிலையில் திடீரென்று கடவுள் கொடுத்த லஞ்சம் தான் என்னை மீண்டும் நடிக்க வைத்தது.

சினிமா விட்டு முழுவதும் விலகிடலாம் 15 வருடங்கள் நடித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திருச்சிற்றம்பலத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த விருது கிடைத்த நிலையில் தான் நம்மை சினிமா விடாது என்றும் கடவுள் நமக்கு தரும் லஞ்சம் இது எனவும் நினைத்துக் கொண்டேன்” என்று பேசி உள்ளார் .
