nithya menon

திடீரென பெயரை மாற்றிய நடிகை நித்யா மேனன்… என்ன காரணம் தெரியுமா…?

By admin on கார்த்திகை 9, 2024

Spread the love

நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் நடிகை மற்றும் பாடகி ஆவார். பெங்களூரில் மலையாளப் பெற்றோருக்கு பிறந்து வளர்ந்தவர் நித்யா மேனன். தனது எட்டு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை பிரபலமான நடிகையாக இருப்பவர் நித்யா மேனன்.

   

தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார் நித்யா மேனன். மிகவும் எதார்த்தமாக அருமையாக நடிக்க கூடியவர் நித்யா மேனன். தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிய திருப்புமுனையை பெற்ற நித்யா மேனன் 2011 ஆம் ஆண்டு 180 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் திருப்பு முனையை பெற்றார் நித்யா மேனன். தொடர்ந்து மெர்சல் திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நித்யா மேனன்.

 

2022 ஆம் ஆண்டு தனுஷ் உடன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் நித்யா மேனன். தற்போது மறுபடியும் தனுசுடன் இணைந்து அவர் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகிறார் நித்யா மேனன்.

தாற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வரும் நித்யா மேனன் ஒரு நேர்காணலில் தனது பெயரை மாற்றி இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு காரணம் தன்னுடைய நித்யா என்ற பெயருக்கு பின்னால் வரும் மேனன் சாதியை குறிப்பதாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் நாங்கள் யாரும் அந்த பேரை உபயோகிக்க மாட்டோம். மேலும் சாதியை குறிப்பிடும் அந்த பெயரை மேலும் உபயோகப்படுத்த எனக்கும் குடும்பத்தாருக்கும் உடன்பாடில்லை. அதனால் நித்யா மேனன் என்ற பெயரை நித்யா மெனன் என்று மாற்றி உள்ளதாக கூறியிருக்கிறார்.