தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். இவர் அடுத்தடுத்த முன்னாடி நடிகர்களுடன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகின்றார். இவருடைய அடுத்தடுத்த படங்கள் கவனம் பெற்று வருகின்றன. தமிழில் தனுசு உடன் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்காக நித்யாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் நித்யா மேனன் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதன்படி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய நித்யா மேனன், பல படங்களில் நடிக்கும் போது இயக்குனர்களிடம் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இந்த ரோலுக்கு நான் கரெக்டா இருப்பேன் நான் கேட்டு இருக்கேன்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் போது கூட இந்த ரோல் எனக்கு சரியா வருமா அப்படின்னு கேட்டேன். உடனே டைரக்டர் நிச்சயம் உங்களுக்கு கரெக்டா இருக்கும் உங்களை மனசுல வச்சு தான் கதையே நான் எழுதினேன் நீங்க நடிங்க என்று சொன்னாரு. அதனைப் போல தான் அடுத்ததாக தனுஷின் இட்லி கடை திரைப்படத்திலும் இது எனக்கு சரியா வருமா என்று கேட்டேன். அவங்களும் சரியா வரும் நடிகை என்று சொன்னாங்க என நித்யா மேனன் கூறியுள்ளார்.
