Categories: சினிமா

ரஜினி மகளைத் தொடர்ந்து இப்போ ராதிகா தங்கை வீட்லையுமா?.. நடிகை நிரோஷா போலீசில் பரபரப்பு புகார்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை நிரோஷா. இவர் ராதிகாவின் உடன்பிறந்த தங்கை. தமிழில் 1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரசம்காரம், செந்தூரப்பூவே மற்றும் பாண்டியநாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இவர் தன்னுடைய வீட்டில் திருடு போய்விட்டதாக கூறி புகார் அளித்துள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பாசன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இவரது வீடு உள்ள நிலையில் வீட்டிலிருந்த சொத்து ஆவணங்கள் திருடு போய்விட்டதாக கூறி போலீசில் இவர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகிக்கும் நபர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர் 70 சவரன் வரை நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது நிரோஷா வீட்டில் சொத்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மாதம் ₹20,000 வாடகை வீண் இல்லையா… இணையத்தில் தீயாய் பரவும் உபாஸ்னாவின் ‘ஸ்மார்ட்’ ஐடியா… நெட்டிசன்கள் அதிரடி விவாதம்…!

பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

5 minutes ago

அட கடவுளே… 5 நிமிட வீடியோ கால்…! 36 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு… விவாகரத்து கோரும் கணவன்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…

5 minutes ago

“2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டாரா சௌந்தர்யா…? நடிகை மரணம் குறித்து இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்…! 22 வருசத்துக்கு அப்புறம் வெடித்த பகீர் சர்ச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!”

90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…

14 minutes ago

“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…

16 minutes ago

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

22 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

24 minutes ago