நடிகை ராதிகாவின் உடன்பிறந்த சகோதரி நிரோஷா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… வாவ் என்ன அழகு… உருகும் ரசிகர்கள்…

By Begam on ஆவணி 7, 2023

Spread the love

90 களில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில்  ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது தங்கைதான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து அவர் செந்தூரப்பூவே, சூரசம்காரம், பட்டிக்காட்டுத்தம்பி, என் கணவர், கைவீசம்மா கைவீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும்,

   

பாண்டி நாட்டு தங்கம், இணைந்த கைகள், பறவைகள் பலவிதம், மருதுபாண்டி, காவலுக்கு கெட்டிக்காரன், மைந்தன், பாரம்பரியம், சிலம்பாட்டம், படிக்காதவன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை நிரோஷா.

   

 

இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமா வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்த நடிகை நிரோஷா ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.  தற்போது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக கலக்கி கொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நிரோஷா. இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களுடன் கூடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ …

 

 

View this post on Instagram

 

A post shared by Nirosha Ratha (@nirosha_radha)