சித்தா பட நடிகையா இது..? நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை நிமிஷா..!!

By admin on ஆனி 11, 2024

Spread the love

பிரபல மலையாள நடிகையான நிமிஷா சஜயன் தமிழில் சித்தா மிஷன் சாப்டர் ஒன், ஜிகர்தண்டா டபுள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவருக்கு 26 வயது தான் ஆகிறது. பகத் பாஸில் நடித்த மாலிக் திரைப்படத்தில் நிமிஷா வயதான தோற்றத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

   

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான நயாட்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு தெக்கன் தள்ளு கேஸ் உள்ளிட்ட படங்களில் நிமிஷா நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து நிமிஷா தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் மனைவியாக நிமிஷா சிறப்பாக நடித்தார்.

   

 

பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் அவரது தைரியமான நடிப்பு பலரையும் ஈர்த்தது. ஹிந்தியில் உருவாகும் டப்பா கார்டல் வெப் சீரிஸில் ஜோதிகாவுடன் இணைந்த நிமிஷா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி அடுத்தடுத்த படங்களில் நிமிஷா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிமிஷா வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாகவும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . தொடர்ந்து போல்டான மற்றும் மெச்சூரான கதாபாத்திரங்களை அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அருவியில் ஆனந்தமாய் குளிக்கும் புகைப்படங்களை நிமிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் சித்தா படத்தில் ஹோம்லி பெண்ணாக நடித்த நிமிஷாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.