பிரபல சீரியல் நடிகையான நேஹா கவுடா கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இவரது பூர்வீகம் பெங்களூரு. நேஹா கவுடாவின் தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்டாக வேலை பார்த்து வருகிறார். அவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான மேக்கப் ஆர்டிஸ்ட் நேஹா கவுடாவின் அப்பா தான்.
சிறு வயதிலிருந்து நேஹா கவுடாவுக்கு நடனம் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது தேட்டர் ஆர்டிஸ்ட் ஆக நேஹா வேலை பார்த்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் மற்றும் நடிப்புக்குள் நுழைந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன், காயத்ரி, குணா ஆகிய சீரியல்களில் நேஹா கவுடா நடித்துள்ளார்.
இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பலரும் சோசியல் மீடியாவில் நடிப்பை பாராட்டியும் வருகின்றனர். இவர் சந்தன் கவுடா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் நேஹா தனது ஸ்கேன் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து எங்கள் குடும்பம் வளர்ந்து வருகிறது என பதிவிட்டுள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபரை வரவேற்க தயாராக இருக்கிறோம்.
View this post on Instagram
எங்கள் இருவரது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது. புதிய அத்தியாயத்தை தொடங்க நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். எல்லையற்ற அன்புகள், முடிவில்லா புன்னகைகள் எங்கள் வாழ்வில் ஆரம்பமாகிறது என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram