கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட நஸ்ரியாவுக்கு தற்போது வயது 29. சிறுவயது முதல் அவர் கலைத்துறையில் பயணித்து வருகின்றார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே மலையாளம் மொழியில் ஒளிபரப்பான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி மற்றும் வாயை மூடி பேசவும் போன்ற பல திரைப்படங்களில் நடித்த நஸ்ரியா இறுதியாக தமிழில் திருமணம் எனும் நிக்கா என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழியில் நடித்து வரும் நடிகை நஸ்ரியா இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலக்கில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் நஸ்ரியா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நடிகை நஸ்ரியா தற்போது ஹேர் கட் செய்து புதிய லுக்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

