Categories: சினிமா

Red-ங்க Red தான் அழகு.. சிவப்பு நிற புடவையில், நெற்றி நிறைய குங்குமம்… கணவருடன் நடிகை நயன்தாரா வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  மலையாள திரையுலகிலிருந்து பல நடிகைகள் தமிழுக்கு வந்து வெற்றி கண்டுள்ளனர். அவர்களின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார்.

தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் தொடங்கி, தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜவான்’ திரைப்படம் வரை தனது  நடிப்பால் ரசிகர்களை வாய்ப்பிளக்கச் செய்து வருகிறார். தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா.

இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து super star ஆக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ‘தி ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும்  இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி நடிகை நயன்தாரா லிப் பாம், நாப்கின் போன்ற பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார். 9skin  என்ற பெயரில் சில productகளையும் லான்ச் செய்தார் .

இப்படி வெற்றிகரமாக தனது சினிமா கெரியர் , குடும்ப வாழ்க்கை இரண்டையும் மேனேஜ் செய்து successful women- ஆக வலம் வந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவிலும் தற்பொழுது ஆக்டிவாக உள்ளார் நடிகை நயன்தாரா. சிவப்பு நிற புடவையில் மங்களகரமாக தனது கணவருடன் கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

15 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

19 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

24 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

41 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

43 minutes ago