நயன்தாராவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த விக்கி… இப்படி ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்…

By Begam on பங்குனி 5, 2024

Spread the love

மலையாள திரையுலகிலிருந்து பல நடிகைகள் தமிழுக்கு வந்து வெற்றி கண்டுள்ளனர். அவர்களின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார். தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் தொடங்கி, தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜவான்’ திரைப்படம் வரை தனது  நடிப்பால் தனி முத்திரை பதித்துள்ளார்.

   

தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

   

 

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து super star ஆக வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களது anniversary யை முன்னிட்டு நயன்தாராவை சர்ப்ரைஸ் செய்த வீடியோ  ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், Flute நவீன் அவர்கள் நயனின் பேவரைட் பாடலை வாசிக்க, உடனே சர்ப்ரைஸ் ஆன நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ச்சியடைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Navin (@flutenavin)