Categories: சினிமா

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ரோல் இருக்கா?.. இதுவரை யாருமே பார்க்காத நயனை வெளியே கொண்டு வரும் சுந்தர் சி..!

Spread the love

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. 40 வயதை கடந்தாலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டியுள்ளார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் எல்லாம் தனக்கு தேவை இல்லை என்றும் நயன்தாரா மட்டும் தன்னை அழைத்தால் போதும் என கூறி இருந்தார். நயன்தாராவிற்கு தமிழில் கடைசியாக தியேட்டரில் வெளியான திரைப்படம் என்றால் அது ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் தான். அந்தத் திரைப்படம் அவ்வளவு பெரிதாக ஓடவில்லை.

அதற்கு முன்னதாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான் அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை கொடுத்த திரைப்படம். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜபான் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு நயன்தாராவுக்கு மிகப்பெரிய பிளாக் பஸ் ஸ்டாப் திரைப்படம் ஆக பாலிவுட் அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் தொடர்ந்து ஓடிடியில் தனது உமன் சென்று படங்களை வெளியிட்டு வருகின்றார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் நயன்தாராவை வைத்து 100 கோடி பட்ஜெட்டில் வேர்ல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கி வருகின்றது. நிகழ்காலம் மற்றும் பீரியட் போர்ஷன் என ஸ்கிரிப்ட்டை சுந்தர் சி வேற லெவலில் செதுக்கி இருப்பதாக தெரிகிறது. பில்லா படத்தில் 2 பீஸ் உடையில் தெறிக்க விட்ட நயன்தாரா ஜவான் படத்தில் போலீஸாக நடித்தாலும் காக்கிச்சட்டை அணியாமல் தான் நடித்திருந்தார்.

இப்படி இருக்க முதல் முறையாக மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தை தாண்டி போலீஸ்கதா பாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் காக்கி சட்டை அணிந்து கண்டிப்பாக இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க சுந்தர் சி பெரும் முயற்சியை செய்து வருவதாக கூறப்படுகிறது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கம்பீரமான ஒரு தோற்றத்துடன் வந்து நிற்கும் திறமை கொண்டவர் தான் நயன்தாரா. அறம் படத்தில் கலெக்டராக வந்து கலக்கி இருப்பார். அடுத்ததாக காக்கிச்சட்டையில் அவர் எப்படி வரப்போகிறார் என்பதை முதல் முறையாக காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

5 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago