இங்க மட்டும் நோ சொல்வீங்க… அதுவே தெலுங்குன்னா உடனே ஓகே செய்வீங்களா? – நடிகை நயன்தாரா மீது ஆவேசப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

By Elango on தை 2, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகமான அவர் லேடி சூப்பர் ஸ்டாராக உச்சத்தைச் தொட்டது தமிழ் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த தமிழ் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் இயக்குனர் அனில்ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் மன சங்கர வரபிரசாத் காரு என்ற படத்தில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 12ம் தேதி சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசனில் நடிகை நயன்தாரா பங்கேற்று இருக்கிறார்.

   

அதாவது மன சங்கர வரபிரசாத் காரு படத்துக்காக நடிகை நயன்தாரா, இயக்குனர் அனில் ரவிபுடியுடன் இணைந்து ஒரு பிரமோஷன் வீடியோவில் நடித்திருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மறுக்கும் நடிகை நயன்தாரா, தெலுங்கு படம் என்றவுடன் பிரமோ செய்கிறார் என்கிற மிகப்பெரிய சர்ச்சையும் விமர்சனமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.