உங்கள இப்படி பாத்து எத்தனை நாளாச்சு…! அட்டை படத்திற்கு அட்டகாசமான கவர்ச்சியில் நடிகை நயன்தாரா…!

By Begam on ஐப்பசி 12, 2023

Spread the love

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.  தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார்.

   

முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.

   

 

அதேபோல இவர் ஒரு படத்தில் நடிக்க 5 கோடி முதல் 10 கோடி வரை வாங்கி வருகிறாராம். ஜவான் திரைப்படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களும், கேட்ட சம்பளத்தை கொடுத்து வருகின்றனர். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு மட்டும் 200 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகையாக மட்டுமின்றி மாடலாகவும் அவ்வப்பொழுது களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ELLE India (@elleindia)