Categories: சினிமா

அன்னபூரணி படத்துக்கு பிறகு கம்பேக் கொடுத்தாரா நயன்தாரா?.. இன்று Netflix OTT- ல் வெளியான டெஸ்ட் படத்தின் ட்விட்டர் ரிவ்யூ..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பில் இறுதியாக அன்னபூரணி திரைப்படம் வெளியான நிலையில் அதன் பிறகு நீண்ட நாட்களாக எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இன்று நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சசிகலா இயக்கத்தில் உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதில் பெஸ்ட் திரைப்படம் ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படம். முதல் பாதி மிகவும் பொறுமையாக நகர்கின்றது. பிஜிஎம் மற்றும் ஸ்கிரீன் ப்ளே நன்றாக இல்லை எனவும் நயன்தாரா மற்றும் மாதவன் ஜோடி பார்ப்பதற்கு நன்றாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும் மாதவனுக்கும் இடையேயான சிறந்த கெமிஸ்ட்ரி அவர்கள் இருவரும் தங்கள் சொந்த சவால்களை எதிர்கொள்ளும்போது நயன்தாராவுக்கு சாதகமாக மாறுகின்றது. இந்த படத்தில் நயன்தாரா, சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை அதிகமாக கொடுத்துள்ளனர்.

சில படங்களில் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்ப்பது நடிகர்களின் நடிப்புதான். அதுதான் டெஸ்ட் படத்தை ஒரு சிறந்த படமாக மாற்றி உள்ளது. குறிப்பாக நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த்த ஆகியோரின் நடிப்பு திரைக்கதையை தூக்கி பிடித்துள்ளது. ஒரு வரலாற்று கிரிக்கெட் போட்டியின் போது ஒன்று கூடும் மூன்று கதாபாத்திரங்களை சுற்றி கதை நகர்கின்றது. இறுதியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இது மனித இயல்பில் உள்ள சாம்பல் நிற நிழல்களை ஆராய்கின்றது. ஒரு அற்புதமான கதையை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. இப்படி ஒரு பக்கம் சாதகமான விமர்சனம் வந்தாலும் மறுபக்கம் படத்தோட கதை இதுதான் என்பதை சொல்ல ஒரு மணி நேரம் ஆகிறதாம். கதைக்களமும் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதமும் நன்றாக இருந்தாலும் ஸ்கிரீன் பிளே சாதாரணமாகத்தான் உள்ளது. இது ஒரு எமோஷனல் திரில்லர் திரைப்படமாகும். மொத்தத்தில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான படம் என்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago