சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை நக்ஷத்ரா. இவர் ஜீ தமிழ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். அந்த சீரியலில் இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்தது.
அதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.நட்சத்திராவின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது வளைகாப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நக்ஷத்ரா.
இவர் அவ்வப்பொழுது புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது நீல நிறப்புடவையில் தேவதை போல கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…
காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…
சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, ஏழைக் குடும்பத்து இளம்பெண்களைப் பாலியல்…
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…