நக்ஷத்ரா நாகேஷ் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அவர் படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார். நக்ஷத்ரா நாகேஷ் ஆர்யா நடித்த சேட்டை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும், சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் நக்ஷத்ரா நாகேஷ் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வேனில் சென்று நட்சத்திராவை உடை மாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த வேனில் ஜன்னல்கள் இல்லாமல் வெறும் கண்ணாடிகள் மட்டுமே இருந்துள்ளது.

அந்த வேனுக்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்த ஐந்து பேர் நக்ஷத்ரா நாகேஷ் உடை மாற்றுவதை பார்ப்பதற்காகவே அமர்ந்திருந்தது போல தெரிந்தது. அவர்கள் அங்கிருந்து நகர்ந்து செல்லவே இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல் அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று அவர்களிடம் கேட்டுக் கொண்டு உடை மாற்றியதாக நக்ஷத்ரா நாகேஷ் தெரிவித்துள்ளார்.

