Connect with us

CINEMA

டிராமா பண்றா… மார்க்கெட் போயிடுச்சு ; உங்களுக்கு என்ன தெரியும் இப்படி பேச….. கடுப்பான நடிகை மும்தாஜ்

90களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை மும்தாஜ். மோனிஷா என் மோனாலிசா படம் மூலம் அறிமுகமான இவர் லபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்தான் காதலா, வேடம், சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

Mumtaz

   

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இப்படி பிசியாக நடித்து வந்த மும்தாஜ் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். இதனிடையே கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். சமீபகாலமாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வரும் மும்தாஜ், ஹிஜாப் அணிந்தே வருகிறார்.

தான் இஸ்லாம் மதத்தை தீவிரமாக கடைபிடிப்பதாகவும், அதில் கூறப்பட்டுள்ள படி நடப்பதாகவும் கூறியுள்ளார் மும்தாஜ். இதற்கு பல நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்தது. மார்க்கெட் போய்விட்டது, டிராமா செய்கிறாள், முதலில் அப்படி நடித்துவிட்டு இப்போது இப்படி வேஷம் போடுகிறாள் என ஏகப்பட்ட கமெண்ட். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை மும்தாஜ்.

Mumtaz about her choice of islam

அவர் கூறியதாவது, நான் ஒரு முஸ்லீம் பெண். என் வீட்டில் சிறுவயதிலிருந்து குரான் ஓதுவார்கள். ஆனால், நான் அதை பின்பற்றல் தவறு செய்துவிட்டேன். சினிமாவில் நடித்தபோது எனக்கு சிறுவயது, அப்போது நான் தவறு செய்துவிட்டேன். நான் நடித்து கொண்டிருக்கும்போதே தான் நானா செய்வது தவறு என எனக்கு புரிந்தது. நான் மாறிவிட்டேன், நான் அதை உணர்ந்த நிமிடமே சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். இப்போது குரான் படித்து இறைவனை தொழுது வருகிறேன்.

நான் ஹிஜாப் அணிய வேண்டும், அதனால் அணிகிறேன். ஏன் உங்களுக்கு பிரச்சனை, ஏன் என்னை இப்படி பார்க்கிறீர்கள். டிராமா, மார்க்கெட் போயிடுச்சு அதனால் இப்படி செய்கிறேன் என எப்படி உங்களால் பேச முடிகிறது. தயவு செய்து, புரிந்து கொள்ளுங்கள். இப்படி யாரையும் அவர்களை பற்றி தெரியாமல் தவறாக பேசாதீர்கள் என கூறியுள்ளார் நடிகை மும்தாஜ்.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top