‘தாமிரபரணி’ நடிகை பானுவுக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகளா?… அம்மாவை மிஞ்சும் அழகு… வைரலாகும் புகைப்படங்கள்…

By Begam on ஆவணி 24, 2023

Spread the love

ஓட்ட நயனம் என்கிற மலையாள படத்தில் அறிமுகமான பிரபல நடிகை முத்தா பானு பின்னர், தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார் நடிகை முக்தா. இவரது குடும்ப பாங்கான அழகிய முகத் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல்,சட்டபடி குற்றம், பொன்னர்-சங்கர் என ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும், இந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.

   

 

தாமிரபரணி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. அதனால், இவர் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் நாள் விலகி இருந்தார். இதனால் இவர் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். பின் மலையாள மொழியில் பானு அதிக படங்களில் நடித்து வந்தார். இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை தான் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது இவரது மகள் கியாரா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை முக்தா தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Muktha (@actressmuktha)