TRENDING
விஜயகாந்த பல வருடங்களுக்கு முன் கொடுத்த பொருளை பொக்கிஷமாக வைத்திருந்த MS பாஸ்கர்.. விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் காண்பித்து உருக்கம்..
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் சங்கம் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படையெடுத்து வந்த திரை பிரபலங்கள் அனைவரும் தன் வாழ்வில் விஜயகாந்த்தால் நடந்த மாற்றத்தை மேடையில் எமோஷனலாக பேசியிருந்தார்கள்.
இந்த வரிசையில் டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்த MS பாஸ்கர் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது என்றும்; அதன் பிறகு எத்தனையோ நாள் அவருடைய ரூமுக்கு போயிருக்கிறேன் அங்கேயே சாப்பிட்டு தூங்கவும் செய்திருக்கிறேன்; எத்தனையோ மீட்டிங் எத்தனையோ டப்பிங் பேசுவதன் வாயிலாக கேப்டன் விஜயகாந்துடன் நிறைய டிராவல் பண்ணி இருக்கிறேன் என்று எம் எஸ் பாஸ்கர் கூறினார்.
மேலும், காசு இல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது TN காளை என்னை நடிகர் சங்கத்தில் சேர கேப்டன் விஜயகாந்த்திடம் அழைத்துச் சென்றார்; என் கையில் காசு இல்லை என்று சொன்னதும் சரி நான் பார்த்துக்கிறேன் என்று கூறி நடிகர் சங்கத்தில் என்னை சேர்த்தார். அப்போது கேப்டன் விஜயகாந்த் கையெழுத்திட்டு கொடுத்த கார்டை இன்று வரை நான் பொக்கிஷமாக தனது சட்டை பையில் எப்போதும் வைத்திருப்பதாக MS பாஸ்கர் தெரிவித்து அந்த கார்டை மேடையில் எடுத்தும் காட்டினார்.
வெள்ளந்தியான மனம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் யாருக்கும் சிறிதளவு கூட தீங்கு நினைக்காதவர் எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைத்து எல்லோருக்கும் பாகுபாடின்றி சரிசமமாக சாப்பாடு கொடுத்தவர்; நானும் சாப்பாடு இல்லாமல் இருந்தபோது எனக்கு சாப்பாடு தந்து தாய் போல் என்னை அரவணைத்தவர் கேப்டன் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.
அதன் பிறகு, MS பாஸ்கர் பாடல் வரிகளை கூறி, “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்; வாரி வழங்கும் போது வள்ளலால் ஆகலாம்; வாலைப் போல தண்ணீர் தந்து தியாகி ஆகலாம்; உருகி ஓடும் மெழுகை போல ஒளியை வீசலாம்” ; இவை அனைத்தும் சேர்ந்து இருந்தால் ஒரு மனிதன் என் அண்ணன் “கேப்டன் விஜயகாந்த்” ஆகலாம் என்று மெய்சிலிர்க்க கூறினார்.