Side ஹீரோயினிலிருந்து main ஹீரோயினாக மாறும் சிவகார்த்திகேயன் தங்கை… வைரலாகும் போட்டோஷூட்…!

By Begam on ஐப்பசி 9, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் எத்தனையோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

   

அந்த வகையில் மூன்று சீசன்களுக்கு மேல் கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

   

    

 

இந்த சீசனின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியின் டைட்டிலே வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் மோனிஷாவும் ஒருவர்.

இவர் குக் வித் கோமாளி சீஸன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் .

மணிமேகலைக்கு பின்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக வளம் வந்தவர் மோனிஷா.

இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மோனிஷா. இவர் தற்பொழுது வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.