இந்த புகைப்படத்தில் இருக்கும் வளர்ந்து வரும் முன்னணி நடிகை யார் தெரியுமா…? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க …

By Begam on கார்த்திகை 10, 2023

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை மிர்னாளினி ரவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.  புதுச்சேரியில் பிறந்த என்ஜினீயரிங் பட்டதாரி தான் நடிகை மிர்னாலினி ரவி.

   

இவர் டிக் டாக் செயலியில் இவர் வெளியிடும் விடியோ வைரல் ஆனதால், 2019 ஆம் ஆண்டில், இயக்குநர் ‘தியாகராஜன் குமாராஜா’ இயக்கிய ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவரின் ‘வித்தியாசமான முக அழகு மற்றும் துறு துறு குறும்பு புன்னகை’ இவருக்கு ‘சாம்பியன், எனிமி’ மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் அதிகம் வந்தன. இதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான “எனிமி” படத்தில் வந்த ‘மாலை டம் டம்’ பாடல் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.

   

 

இதைத்தொடர்ந்து ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர், தற்பொழுது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் தொடர்ந்து தனது ஜொலிக்கும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தும் வருகிறார் . இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.