Unfollow செஞ்சிட்டு போங்க…! உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு…? வேற ஹீரோவா இருந்தா இப்படி பேசுவீங்களா…? கொந்தளித்த நடிகை மீஷா கோஷல்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை மீஷா கோஷல், விஜய் ரசிகர்கள் மீது சமூக வலைதளங்களில் காட்டப்படும் வெறுப்பு குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். தனக்குப் பிடித்தமான நடிகரின் திரைப்படங்களைப் பார்ப்பதும் அவரைக் கொண்டாடுவதும் ஒவ்வொரு தனிமனிதனின் தனிப்பட்ட உரிமை என்றும், அதற்காக விஜய் ரசிகர்களைக் குற்றவாளிகளைப் போல் சித்தரிப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், பிற நடிகர்களின் ரசிகர்களை விட்டுவிட்டு விஜய் ரசிகர்களை மட்டும் இலக்கு வைப்பதைக் சுட்டிக்காட்டிய அவர், விஜய் ரசிகை என்பதால் தன்னைப் பின்தொடர விரும்பாதவர்கள் தாராளமாக ‘அன்ஃபாலோ’ செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டையும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் தேவையின்றி ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போடுவது அறிவீனமானது என்றும் அவர் தனது பதிவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் .வேறு ஒரு ஹீரோவின் படமாக இருந்தால் இவ்வளவு பேசியிருக்க மாட்டார்கள். சிறிய குழந்தைகள் கூட உங்களை விட மெச்சூரிட்டியாக இருப்பார்கள் என விமர்சனம் தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்