விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியலில் ஹீரோவாக தொகுப்பாளர் தீபக் நடித்து வருகிறார். இவர் வரும் திருமதி செல்வம் மற்றும் தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்காமல் இருந்த இவர் மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கின்றார். இந்நிலையில் இந்த சீரியலில் தீபக் அம்மாவாக கோதைநாயகி என்ற கதாபாத்திரத்தில் மீரா கிருஷ்ணா என்பவர் நடித்து வருகின்றார். தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் குறித்தான ஷாக்கிங் தகவல் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகை மீரா கிருஷ்ணனுக்கு , இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் தீபக்கை விட 8 வயது குறைவாம். நடிகை மீரா கிருஷ்ணா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொக்கிஷம் என்ற சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நாயகி, வந்தாள் ஸ்ரீதேவி, அன்புடன் குஷி, அருந்ததி, இரட்டை ரோஜா, சித்தி 2 உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான கார்த்திகை தீபம் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். தற்பொழுது 44 வயதாகும் நடிகர் தீபக்கிற்கு 36 வயதான நடிகை மீரா கிருஷ்ணன் அம்மாவாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
