கணவரை இழந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் நடிகை மீனா!…. மீண்டும் அதே பணியை செய்கிறாரா?… வைரலாகும் வீடியோ இதோ!….

By Begam

Published on:

கணவரை இழந்த பிரிவிலிருந்து மீண்டு வரும் நடிகை மீனா நீண்ட இடைவெளிக்கு பின்னர் விளம்பர படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவர் இறந்த துக்கத்திலிருந்து தற்பொழுது தான் நடிகை மீனா மீண்டு வந்து கொண்டுள்ளார்.

இவரை இந்த துக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர இவரது தோழிகள் பலவாறு  முயற்சி செய்து வருகின்றனர். நடிகை மீனாவின் பிறந்தநாளை கூட சமீபத்தில் சிறப்பாக கொண்டாடினர். இந்த துயரத்தில் இருந்து தற்போது தான் சிறிது சிறிதாக மீண்டு வருகிறார் மீனா.

தற்பொழுது இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை அவரே தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நடிகை மீனா விளம்பர படப்பிடிப்பிற்காக மேக்கப் போடும் காட்சிகள், நடிக்கும் காட்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீனாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)