actress meena

அந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலே… அது எனக்கு ரொம்பவும் வருத்தம்தான் – வெளிப்படையாக சொன்ன நடிகை மீனா!

By Elango on மாசி 27, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மீனா. குறிப்பாக என் ராசாவின் மனசிலே எஜமான் அவ்வை சண்முகி நாட்டாமை முத்து தாய்மாமன் ராஜகுமாரன் ஆனந்த பூங்காற்றே மாமன் மகள் என பல வெற்றிப் படங்களில் மீனா நடித்திருக்கிறார். இப்போதும் தமிழ் மலையாள படங்களில் மீனா பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை மீனா கூறியதாவது, தேவர் மகன் படையப்பா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தது எனக்கு வருத்தம் தான். ஆனால் கிடைக்காததை நினைத்து கவலைப்படாமல் முத்து அவ்வை சண்முகி படங்களை போல கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கணும் என்கிற பாசிட்டிவ் எண்ணம்தான் என்னை வழி நடத்தியது என்று நடிகை மீனா அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.