47 வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை மீனா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..

By Mahalakshmi on தை 2, 2024

Spread the love

தென்னிந்திய திரைப்படத்தின் பிரபல நடிகை மீனா துரைராஜ். நடிகை மீனா புத்தாண்டு தெரிவித்து இணையத்தில் பதிவிட்ட க்யூட்டான போட்டோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதில் நடிகை மீனா அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமானவர். நடிகை மீனா சிறுவயதிலேயே திரைப்படத்துறையில் நடிக்க ஆரம்பித்ததால் தனது கல்வியை  பாதிலேயே நிறுத்தினார்.

   

தனது நடிப்புத் திறமையின் காரணமாக தென்னிந்திய திரைப்படத்தின் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை மீனா. “சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள்” இதுவே நடிகை மீனா நடித்த முதல் திரைப்படம் ஆகும். நடிகை மீனா பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் கொடி கட்டி பறந்த நடிகை மீனா தமிழ் மற்றும் தெலுங்கு திரைஉலகின் முன்னணி நடிகையாக தனது இடத்தை பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

   

#image_title

 

நடிகை மீனா கதாநாயகியாக நடித்த திரைப்படம்  ‘முத்து’.  இந்த திரைப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியது. இதனை அடுத்து ஜப்பான் நாட்டு மக்கள் மனதில் பதிந்தார் நடிகை மீனா. இதனால் ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். நடிகை மீனா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அவ்வபோது; இணையத்தில் தனது புகைப்படத்தை அடிக்கடி பகிர்ந்து வருகிறார் நடிகை மீனா. இந்த வகையில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து நடிகை மீனா க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)