மீனாவின் 48-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஒன்றுதிரண்ட திரைப்பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!!

By Nanthini on புரட்டாதி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் தான் நடிகை மீனா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். 90 காலகட்டத்தில் அதிக படங்களில் நடித்த ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார்.

   

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் வந்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகள் சிலர் மட்டுமே.

   

 

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த மீனா சிவாஜி மற்றும் ரஜினி உள்ளிட்டோருடன் அப்போதே நடித்து விட்டார்.

முக்கியமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் மீனா குழந்தையாக நடித்தது பலரது பாராட்டை பெற்றது. மிகச்சிறந்த நடிகையாக வருவார் என்று அப்போதே அவர் பெயர் எடுத்து விட்டார். மீனா வளர்ந்த பிறகு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் நடிக்க முடிவெடுத்த அவர் ராஜ்கிரன் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் 1991 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார்.

இந்த திரைப்படம் நல்ல வெற்றியடைந்த நிலையில் மீனா சோலையம்மா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இவர்களில் ரஜினியுடன் மீனாவுக்கு கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க்அவுட் ஆனது.

இருவரும் ஒன்றாக இணைந்து முத்து மற்றும் எஜமான் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தனர். பிறகு விஜய் உடன் ஷாஜகான் படத்தின் ஒரு பாடலுக்கு மீனா நடனமாடி ஆச்சரியப்படுத்தினார்.

இதனிடையே வித்தியாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். அவரும் தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்த அசத்தியிருந்தார்.

அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். அந்த உயிரிழப்பு மீனாவை மிகவும் பாதித்தது.

ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்து அவர் தற்போது நார்மலாக இருக்கின்றார். தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் மீனா நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீனாவின் பிறந்தநாளை நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாட்டி வைத்து சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

அதில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சரத்குமார், கலா மாஸ்டர், நடிகை சதா, சங்கீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மீனாவின் பிறந்த நாளை கொண்டாடினர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.