தமிழ் திரையுலகில் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையான மனோரமாவின் ஒரே மகனான பூபதி (70) காலமானார். மூச்சு திணறல் பிரச்னை காரணமாக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனளிக்காமல் அவருடைய உயிர் பிரிந்தது. இவர், விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தில் அறிமுகமாகி பல படங்கள் மற்றும் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
