ஷாலினியின் தம்பிக்கு போன் செய்து திடீரென பணம் கேட்ட ஜெய் பட நடிகை.. அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா..?

By Nanthini on ஐப்பசி 29, 2024

Spread the love

தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான இன்னொருவன் என்ற திரைப்படத்தில் மனோஹா என்ற பெயரில் அறிமுகமானவர்தான் நடிகை மனோ சித்ரா. பிறகு இயக்குனர் மீனா கதிரவனை சந்தித்தபோது அடுத்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளார். அப்படி நடிகர் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மனோ சித்ரா. அந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

SRI TALKIES: AVAL PEYAR THAMIZHARASI

   

 

   

ஆனால் இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் இவருக்கு அடுத்து பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு பெரிதாக கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்த பிறகு 2012 ஆம் ஆண்டு சீனு ராமசாமியின் நீர்ப்பறவை திரைப்படத்தில் மனோ சித்ரா துணை வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து 2014 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் விமலுடன் இணைந்து நேற்று இன்று படத்தில் நடித்தார். பின்னர் அஜித்தின் வீரம் திரைப்படத்திலும் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார்.

 

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷிக்கு திடீரென கால் செய்தார். அப்போது தனக்கு ஒரு அவசரம் என்று கூறி அவரிடம் 3000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அவரும் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே தானும் பணம் தருவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். பிறகு பேசிய மனோ சித்ரா, நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு க்ளோஸ். அவரும் நிறைய இடத்துல ஊர் சுத்துவாரு. அதாவது நிறைய கோவில்களுக்கு செல்வது அங்கு ஆராய்ச்சி செய்வது என அதில் அவர் அதிகமாக கொண்டவர். நானும் அப்படியே இருந்ததால் எங்களுக்குள் நல்ல ஒரு நட்பு உள்ளது என்று மனோ சித்ரா பேசியுள்ளார்.