மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் பிரித்திவிராஜ், மம்முட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை டு திரைப்படத்திலும் மஞ்சு வாரியர் நடித்துக் கொண்டிருக்கிறார் .
பிரபல நடிகரான திலீப்பை மஞ்சுவாரியர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 20 வயதை கடந்த மீனாட்சி என்ற மகள் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு வாரியர் திலீப் விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பிறகு மகள் தனது தந்தையுடன் சென்றுவிட்டார். பின்னர் திலீப் நடிகை காவியா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மீனாட்சி சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படிக்க டாக்டர் பட்டம் பெற்றார். மீனாட்சி பட்டமளிப்பு விழாவில் தனது தந்தையுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title