‘அவர் செட்டில் இருந்தால் நான் வரக்கூடாதாம்’… நடிகை நயன்தாரா பற்றி நடிகை மம்தா மோகன்தாஸ் அதிரடி(வீடியோ)..

Spread the love

இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் 2006 இல் வெளியான ‘சிலப்பதிகாரம்’ படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் முதன் முதலில் 2005 இல் மயூகம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகை மம்தா நடிகையாக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி என பன்முக திறமைகளை தன்னில் கொண்டவர்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இரண்டு முறை பிலிம் பார் விருது, 2006ல் தெலுங்கில் சிறந்த பின்னணி பாடகி மற்றும் 2010ல் மலையாளத்தில் சிறந்த நடிகை மற்றும் கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றவர். இதைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது 38 வயதான மம்தா மோகன் தாஸ் தோல் நிறமி இழத்தல் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடிகை நயன்தாராவை குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது கூறிய விஷயம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் குசேலன். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா.அந்த படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை ஒப்பந்தம் செய்திருந்தனர். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘குசேலன் படத்திற்காக 4, 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால் படம் வெளியானபோது அதில் நான் இல்லை.

பாடல் காட்சி நடக்கவில்லை. வேறு ஒரு ஹீரோயின் டான்ஸ் ஆடினால் நான் நடிக்க மாட்டேன் என குசேலன் பட ஹீரோயின் கூறியதாக பின்னர் கேள்விப்பட்டேன். இது தான் நான் கேள்விப்பட்டது. இதை தான் என்னிடம் கூறினார்கள். இன்னொரு நடிகை இருப்பதால் நான் பயப்படவில்லை. அவங்க கேமராவை வைத்தபோதே நான் ஃபிரேமில் இல்லை என்பது தெரியும். அந்த பாடலில் என் பங்கு இல்லை. நான் 3, 4 நாட்கள் வீணடித்தது தான் மிச்சம். ஆனால் படம் ரிலீஸானபோது என்னுடைய பேக் ஷாட் இருந்தது. என் தொப்பியின் நுனி மட்டும் தெரிந்தது. என் முகம் தெரியாது. அதை பார்த்து தான் நான் ஷாக் ஆகிட்டேன். இதற்கு அவர் பதில் கூறுவார் என எதிர்பார்க்கிறேன்’ என கூறியுள்ளார்.

Begam

Recent Posts

“சீட்டு இருந்தும் உள்ள விடல…” கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் காயம்…. கொந்தளித்த பொதுமக்கள்… ராவணன் வத நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு… பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ரங்கலீலா மைதானத்தில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியின் போது, காவல்துறையினரின் கெடுபிடி மற்றும் மோசமான…

7 minutes ago

குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் இறந்த தாய்…. தந்தையிடம் பேத்தியை ஒப்படைக்காத தாத்தா… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தாயை இழந்த 4 வயது பெண் குழந்தையை அதன் இயற்கை பாதுகாவலரான தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என தாய்வழி தாத்தாவுக்குப்…

16 minutes ago

“தலை முடியை பிடித்து இழுத்த தாய்…” எட்டி உதைத்த வளர்ப்பு தந்தை… லிப்டில் சிறுவனுக்கு நடந்த கொடுமை…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மலேசியா நாட்டின் கெடா மாநிலம் அலா ஸ்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்ட்டிற்குள், குழந்தைக்கு வாங்கிய பிராம் வண்டி…

46 minutes ago

சிக்னலில் நின்றவர்களை அடித்து தூக்கிய லாரி…! துடிதுடித்து இறந்த மாணவி… தூக்கி வீசப்பட்ட வாகனங்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

வெனிசுலா நாட்டின் அபுரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ பகுதியில், பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சிக்னல் சந்திப்பில்…

58 minutes ago

“சிலை கரைப்பின் போது ஆற்றில் இறங்கிய இளைஞர்கள்…” சப்-இன்ஸ்பெக்டர் அறைந்ததால் வெடித்த பெரும் சர்ச்சை… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில், சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆற்றில் இறங்க முயன்ற இளைஞர்களைக் காவல் ஆய்வாளர்…

1 மணத்தியாலம் ago

“பைக் ஓட்டி சென்றபோது திடீரென வெடித்த செல்போன் பேட்டரி…” தூக்கி வீசப்பட்டு நபர் பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்… பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரின் செல்போன் பேட்டரி திடீரென வெடித்ததில், அவர் பைக்கிலிருந்து தூக்கி…

1 மணத்தியாலம் ago