தாமரைக் குளம் அருகே தங்க தாமரையாக மலர்ந்த மாளவிகா மோகனன்.. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on மார்கழி 14, 2024

Spread the love

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான்  திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர்தான் மாளவிகா மோகனன். இவர் அந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

அதன் பிறகு தற்போது யுத்ரா என்ற ஹிந்தி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார்.

   

 

மலையாள நடிகை ஆன இவர் தற்போது இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோயினியாக மாறியுள்ளார்.

ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் வாயிலாக கோலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் சினிமாவில் நுழைந்தார்.

இதனையடுத்து ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக  நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

அது மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை கிரங்கடித்து வருகின்றார். யுத்ரா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராஜாசாப் படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.

அதன்படி தற்போது ஸ்வெட்டர் போன்ற உடையை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.