நள்ளிரவில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்.. ஓ இதுதான் விஷயமா..? வைரலாகும் போட்டோஸ்..!!

By Priya Ram

Published on:

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மகாலட்சுமிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது.

   

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் ஆன வாணி ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து ஆபீஸ், செல்லம்மே, உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியலில் மகாலட்சுமி நடித்துள்ளார். மகாலட்சுமி அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இன்று மகாலட்சுமி தனது 34 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு ரவீந்தர் நள்ளிரவு 12 மணிக்கு கேக் கொடுத்து தனது மனைவியை சர்ப்ரைஸ் செய்துள்ளார். புது டிரஸ் சிக்கன் பிரியாணி என தடபுடலாக ரவீந்தர் தனது மனைவியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram