சூப்பர் ஸ்டார் பட நடிகை மாதவி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… ப்பா என்ன அழகு… இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே…

By Begam

Updated on:

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மாதவி. இவர் ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் இணைந்து நடித்துள்ளார். சிறுவயதிலேயே நாட்டில் கலையில் கை தேர்ந்தவர் நடிகை மாதவி. தனது நாட்டிய திறமையை கிட்டதட்ட 1000 மேடைகளுக்கும் மேல் வெளிப்படுத்தியுள்ளார்.

   

டீன் ஏஜிலேயே இவர் நடித்த ஒரு தெலுங்கு படம் செம ஹிட் ஆனது. இதை தொடர்ந்து தனது சிறு வயதிலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் மட்டும் பத்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகை மாதவி. 1983 ரஜினிகாந்தின் ‘தில்லுமுல்லு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் ரஜினி உடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். அதோடுமட்டுமின்றி ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் கமலுடன் ராஜபார்வை, காக்கிச்சட்டை, மங்கம்மா, சபதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் அந்த காலத்திலேயே அவருடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.

இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஒரியா என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1996ம் ஆண்டு தொழிலதிபர் ரால்ஃப் ஷர்மா என்பவரை நடிகை மாதவி திருமணம் செய்துள்ளார். நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை மாதவியின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….