பழம்பெரும் நடிகையான எம் என் ராஜம் மகள் நளினா சென்னையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
பழம்பெரும் நடிகை எம் என் ராஜம் மற்றும் ஏ எல் ராகவன் ஆகிய தம்பதியரின் ஒரே மகள் நளினா. ஏ எல் ராகவன் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட பாடல்களை பாடி இருக்கின்றார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் எங்கிருந்தாலும் வாழ்க போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் 1950 முதல் 1970 காலகட்டத்தில் பல பாடல்களை பாடி இருக்கின்றார். சமீபத்தில் கொரோனா காலத்தில் பாடகர் ஏஎல் ராகவன் உயிரிழந்தார். இவரின் மனைவி பிரபல நடிகை எம் என் ராஜம்.
இவரும் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாகவும் அதன் பிறகு குணசத்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர். சினிமா மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் இவர் நடித்திருக்கின்றார். இவர்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்பார்கள். கணவர் இறந்த பிறகு நடிப்பில் இருந்து விலகிய இவர் தனியாக மகளுடன் வசித்து வருகின்றார்.

இவரின் மகள் நளினா சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சரவணன் மறைந்த பழம்பெறும் நடிகர் எம் கே ராதாவின் மகன் ஆவார் .இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனரும் கூட, நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருந்து வருகின்றார். இன்று அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் திரையுலகிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
