நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். இறுதியாக கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். கவின் மற்றும் மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாஸ்ட்லியா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “can’t help but wonder” என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ள நிலையில் கவின் பற்றிதான் மறைமுகமாக இப்படி ஒரு பதிவை ஆசிரியர் போட்டுள்ளதாக பலரும் கமெண்டு செய்து வருகிறார்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…