தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகர் எம் ஜி ஆர். இவர் முதன் முதலில் இயக்கிய தயாரித்த திரைப்படம் தான் நாடோடி மன்னன். இந்த திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று எம்.ஜி.ஆருக்கு பெரிய லாபத்தை தந்தது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த எம்ஜிஆர் மீண்டும் தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இறங்கிய திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். முதல் முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் எம்ஜிஆருக்கு மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவுக்கும் புதுமையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.
எம்ஜிஆர் நடிப்பில் விளம்பரம் இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் லதா. அடுத்தடுத்து எம்ஜிஆருடன் தோழர் வெற்றி படங்களை கொடுத்தார். இருந்தாலும் தனது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் நடிக்கும் போது எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை லதா தயங்கி உள்ளார். அதன் பிறகு அவரிடம் பேசி எம்ஜிஆர் சமதிக்க வைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்ற போது ஹோட்டல் அறையில் இருந்த லதா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது திடீரென்று எம்ஜிஆரின் மனைவி ஜானகி அங்கே வந்த நிலையில் அவருக்கு தெரியாமல் ஐஸ்கிரீமை ஒளித்து வைத்துள்ளார். அதன் பிறகு அவர் சென்றதும் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதான் மறுநாள் ஒரு பாடல் காட்சிக்காக சென்ற போது எம்ஜிஆர் ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சா என்று கேட்டதும் நான் சாப்பிடவே இல்லையே என்று லதா கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட எம்ஜிஆர் லதாவின் தலையில் செல்லமாக கொட்டி மண்டு நான் சின்ன வயதில் நாடகத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படி தான் நீயும் இருக்க, நீ ஆர்டர் பண்ணா எனக்கு தான் பில் வரும் என்று எம்ஜிஆர் சொல்ல லதா இனிமேல் ஆர்டர் பண்ண மாட்டேன் என்று சொல்ல இல்லை ஆர்டர் பண்ணு என்று சொல்லி எம்ஜிஆர் அனைவரிடமும் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…