இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். எம்ஜிஆர் என்றால் உதவும் குணம் ஒன்று என்றால் தைரியம் மற்றொன்று குணம். இந்த நிலையில் எம்ஜிஆர் குறித்து நடிகை லட்சுமி பேசியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எம்ஜிஆர் பற்றி அவர் பேசுகையில், எம்ஜிஆர் உடன் இதய வீணை என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து கொண்டிருந்தபோது அவர் பைனாகுலரில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் அவருடைய அருகில் சென்று என்ன சார் அங்கேயே பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்டேன். உடனே அவர் சைகையில் அமைதியாக இரு என்று சொன்னார். பிறகு என்னிடம் எல்லோரும் அங்கே போய் அமருங்கள், ஸ்னாக்ஸ் வருகிறது சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டார். சிறிது நேரம் கழித்து திடீரென்று சூட்டிங் இன்று வேண்டாம் பேக்கப் செய்யுங்கள், பெண்களை எல்லாம் பத்திரமாக அனுப்புங்கள் என்று கூறினார். உடனே நாங்கள் அனைவரும் வேனில் ஏறி அமர்ந்து கொண்டோம். அந்த சமயத்தில் ஒரு கும்பல் பெண்களை கடத்துவதற்காக காரில் வந்தது. ஸ்டண்ட் யூனியன் ஆட்கள் எல்லோரும் அவர்களுடன் சண்டை போட்டனர். அவர்களுடன் சேர்ந்து எம்ஜிஆர்யும் களத்தில் இறங்கி சண்டையிட்டார். அத்தனை பேரை அவர் அன்று அடித்ததை நான் என் கண்ணால் பார்த்தேன் என்று படப்பிடிப்பில் நடந்த உண்மை சம்பவத்தை நடிகை லட்சுமி பகிர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…
தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…