நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாகவும், இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நல்ல புகழ் தேடி தந்தது. எனது 2006-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான சக்கர முத்து திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் லட்சுமி நடித்தார். அதன் பிறகு கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் சினேகாவின் தாயாக நடித்து அறிமுகமானார்.
பொய் சொல்லப் போகிறோம், நாடோடிகள், ஈரம், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகான் அல்ல, ராவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் லட்சுமி நடித்துள்ளார். 1985-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை லக்ஷ்மி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஓமன் நாட்டில் இருந்தார்.
அதன் பிறகு தனது குழந்தைகளின் கல்விக்காக 2005-ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு கட்டத்தில் எனக்கு இவர் எனக்கானவர் இல்லை அப்படின்னு தோணுச்சு. எனக்கு அப்பம் எல்லாம் இங்கிலீஷ்ல பேச தெரியாது. அப்போ இவரு என்ன பிரண்ட்ஸ் முன்னாடி கூட்டிட்டு போறதுக்கு பேடா ஃபீல் பண்ணி இருக்காரு என கூறியுள்ளார்.
மேலும் எங்க வீட்ல சண்டை வந்தா மண்டையை உடைந்துவிடும். மேக்சிமம் குழந்தைகளால தான் சண்டை வரும். என் கணவர் அவரோட அம்மா வீட்டுக்கு போயிட்டா ரொம்ப நல்லவர் மாதிரி இருப்பாரு. என் மாமியார் வீட்ல எப்பவுமே அவ சொல்றபடி தான் ஆடுறேன்னு என் கணவரை பார்த்து சொல்லிகிட்டே இருப்பாங்க. எனக்கு மூணு பிள்ளைங்க இருக்காங்க. எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பா தான் பெஸ்ட் ஹீரோ. என் கணவர் அதுக்கு பொருத்தமானவர் என கூறியுள்ளார்.