Connect with us

CINEMA

இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தனுஷின் ‘கர்ணன்’ பட நடிகை… குவியும் வாழ்த்துக்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை லக்ஷ்மி பிரியா. இவர் தொடக்கத்தில் இவர் ஏராளமான மேடை நாடகத்தில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ஒரு சில தொலைகாட்சிகளின் ஒரு பகுதியாக லட்சுமி பிரியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பல ஆடிஷன்களுக்கு பிறகு, சாரதா கதாபாத்திரத்தின்மூலம் தர்மயுத்தம் எனும் தொடரில் சின்னத்திரையில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து ​​இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தில் நடிகை லட்சுமிப்ரியா அறிமுகமானார். பிறகு, சுட்டக் கதை திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார் லட்சுமி பிரியா.  இதனைத் தொடர்ந்து, தனுஷின் கர்ணன் (பத்மினி), டிக்கெட் மற்றும் மாயா ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு, ‘லட்சுமி’ என்ற குறும்படத்தில் நடித்ததற்காக ஏராளமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் கலவையாகப் பெற்றார்.

நடிகை லட்சுமி பிரியா பிரபல நடிகை மட்டுமல்ல. தேசிய அளவிலான கிரிக்கெட் வீராங்கனையும்தான். தனது 10 வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பயிற்சி பெற்று வரும் லட்சுமி பிரியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அவர் தேசிய அளவிலான அல்டிமேட் ஃபிரிஸ்பீ சாம்பியனும்கூட.

தற்பொழுது இவர் செப்டம்பர் 6 முதல் 10 வரை நடைபெறவுள்ள ஆசிய உலகக்கோப்பை போட்டிக்கான அல்டிமேட் ஃபிரிஸ்பீ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய, இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top