என்னது… நம்ம ‘மகாநதி’ சீரியல் காவேரி இத்தனை தமிழ் படங்கள்ல  நடிச்சுருக்கங்களா..?இதை யாராச்சும் நோட் பண்ணிங்களா…?

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன .அதில் புதிதாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் மகாநதி. இந்த சீரியல் தந்தையே இழந்த 4 சகோதரிகள் தங்கள் வாழ்க்கையில் படும் கஷ்டங்களை பற்றி  கூறுகிறது.

   

இந்த சீரியலில் காவேரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் காவேரி தனது குடும்ப கஷ்டத்தை நீக்குவதற்காக பணத்திற்காக வேண்டி விஜயை காண்ட்ராக்ட் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் விஜய்க்கும் காவிரிக்கும் இடையே தற்பொழுது உண்மையாகவே காதலும் வர ஆரம்பித்துள்ளது.

இதனை இருவரும் எப்பொழுதும் புரிந்து கொள்வார்கள். இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்பொழுது இந்த சீரியலில் மகாநதி ஆஹா கல்யாணம் சீரியல் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவிரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிப்பவரின் உண்மையான பெயர் லட்சுமி பிரியா.

இவருக்கென சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. நடிகை லட்சுமி பிரியா  முதன் முதலில் மாடலிங் துறையில் கால்பதித்த இவர் மிஸ்மிராக்கி 2018 என்னும் அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .அதுமட்டுமின்றி இவர் நடிகை திரிஷாவின் ரோடு, நடிகர் சிம்புவின் பத்து தல, ட்ரிப் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளாராம்.