லைலாவுக்கு இவ்ளோ வயசா..? இன்னும் அந்த அழகும், குசும்பும் உங்கள விட்டு போகவே இல்ல.. வைரலாகும் Birthday வீடியோ..

By Begam on ஐப்பசி 30, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கலக்கியவர் நடிகை லைலா. இவர் ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து  காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

   

ஆனால் இவருக்கு பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. விக்ரம், சூர்யா, அஜித், பிரபுதேவா போன்ற பிரபல தமிழ் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லைலா.   அதன் பின்னர் சரியான பல வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

   

 

தற்பொழுது இவர் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். நடிகை லைலா 2006 இல் மேஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை லைலா தனது 43 ஆவது பிறந்தநாளை kpy பாலாவுடன் இணைந்து கேரவனில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தற்பொழுது kpy பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ இன்னும் அந்த அழகும்,குசும்பும் உங்கள விட்டு போகவே இல்ல’ என்று கமெண்ட் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Laila Official (@laila_laughs)