Connect with us

மோனிகா சொல்றது சுத்த பொய்.. எனக்கு அந்த விஷயம் முதல்லயே தெரியும்.. நடிகை குட்டி பத்மினி வெளியிட்ட வீடியோ..!!

CINEMA

மோனிகா சொல்றது சுத்த பொய்.. எனக்கு அந்த விஷயம் முதல்லயே தெரியும்.. நடிகை குட்டி பத்மினி வெளியிட்ட வீடியோ..!!

 

நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்திருந்தார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், சீம ராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். அவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இமான் இசையமைக்கவில்லை.

   

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இமான் கூறியதாவது, இந்த ஜென்மத்தில் நான் சிவகார்த்திகேயன் படத்தில் இசையமைப்பாளராக வேலை பார்க்க மாட்டேன். அது நடக்கவே நடக்காது. காரணம் சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம். அந்த துரோகத்தை வெளியே சொல்ல முடியாது. அது தனிப்பட்ட விஷயம். அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தை நான் மறக்கவே மாட்டேன் என கூறினார்.

இது திரையுலகினரை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் டி. இமானின் முதல் மனைவி மோனிகா தலையிட்டு பேசினார். அவர் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன். அவர் மீது எந்த தவறும் கிடையாது. எங்களது விவாகரத்து விஷயத்தில் சிவகார்த்திகேயன் எனக்கு ஆதரவாக பேசியதால் இமான் அப்படி கூறுகிறார். மற்றபடி சிவகார்த்திகேயன் ஜென்டில்மேன். இமான் இதுவரை எனக்கு ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி ஒரு வீடியோ வெளியிட்டு இமானின் மனைவி மோனிகா சொல்வது பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை இமான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் அவர்தான் படிக்க வைக்கிறார். ஏற்கனவே இமானும், அவரது தந்தையும் நடந்த விஷயங்கள் பற்றி என்னிடம் கூறியிருந்தனர் என பத்மினி வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top