நடிகருடன் காதல்.. நிறைவேறாமல் போன திருமண ஆசை.. ஜெயலலிதாவின் பிரேக் அப் குறித்து குட்டி பத்மினி பகிர்ந்த விஷயங்கள்..!

By Nanthini on பங்குனி 12, 2025

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.  இந்நிலையில் மறைந்த நடிகை ஜெயலலிதா பற்றி குட்டி பத்மினி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஜெயலலிதா-சோபன் பாபு பிரிவிற்கு காரணமாக அமைந்த சம்பவம்! சைலண்ட் கில்லராக இருந்தது யார்?

   

 

   

அதில், ஜெயலலிதா அக்காவின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. அவருடன் இணைந்து சுமார் எட்டு படங்களுக்கு மேல் நான் நடித்திருப்பேன். அவங்க கூட இணைந்து நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணி இருக்கேன். அந்த சமயத்துல அக்கா சந்தியா கூட நிறைய சண்டை போடுவாங்க. பிளைட்டில் ஏறும்போது கூட அவங்க இருந்தா அந்த பக்கம் எழுந்து போ என்று சொல்லிட்டு என்ன அங்க உட்கார வைப்பாங்க. வெளியூர் போகும் சமயத்தில் கூட ராதா அம்மாவை என்னோட பக்கத்து ரூம்ல போட்டுருங்க என்று சொல்லுவாங்க. அம்மா ரொம்ப நல்லாவே இங்கிலீஷ் பேசுவாங்க. நிறைய என்கிட்ட பகிர்ந்து இருக்காங்க. நிறைய தியேட்டருக்கு ஜெயலலிதா அம்மாவுடன் படம் பார்க்கச் சென்று இருக்கேன். குறிப்பா ப்ளூ டைமண்ட் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அங்க எப்ப வேணாலும் போய் படம் பார்த்துட்டு வந்துடலாம்.

 

Jayalalithaa College Life,ஜெயலலிதா கல்வி வாழ்க்கையில் விழுந்த குறுக்கீடு! - jayalalithaa biography and her college life details - Samayam Tamil

பர்தா போட்டுட்டு அவங்க கேட்டதுக்கு வந்து படம் பாத்துட்டு இருந்தா நான் தான் இன்டர்வல்ல போயி ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து தருவேன். அதன் பிறகு அரசியலில் நுழைந்து ஜெயலலிதா அம்மா மந்திரியான பிறகு நெருக்கம் அப்படியே குறைந்துவிட்டது. ஆனா ஒரு பிரச்சனை என்று போனால் உடனே உதவி செய்வாங்க. நான் கும்மிடிப்பூண்டியில் 20 ஏக்கர் நிலம் வைத்திருந்தேன். அதுல ரோடு போறதுக்காக ஒரு எம்எல்ஏ 30 அடி நிலம் கேட்டார். சரி என்று கொடுத்ததற்கு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அங்க போய் பார்த்தா வீடு கட்டி உக்காந்துட்டு இருக்காரு. என்ன பண்றதுன்னு தெரியாம ஜெயலலிதா அக்கா கிட்ட போய் விஷயத்தை சொன்ன உடனே முடித்து கொடுத்துட்டாங்க. அந்த இடம் உனக்கு வேண்டாம் என்று சொன்னாங்க.

Jayalalithaa Birthday: Tamil Nadu former Chief Minister Jayalalitha Birthday: 6 முறை ஆட்சியமைத்த ஒரே பெண் முதல்வரின் பிறந்த நாள் இன்று | Samayam Tamil

 

முதியோர் இல்லம் போடுவதற்காக தான் அதை வாங்குன என்று சொன்னதும் எதுக்காக அங்க போடுற காஞ்சிபுரம் பக்கம் பொறம்போக்கு நிலத்தை பாரு நான் உனக்கு வீடியோ மூலமாக திறந்து வைக்கிறேன் என்று சொன்னாங்க. எனக்கு ரொம்ப நாளாவே அந்த முதியோர் இல்லம் திறக்க வேண்டும் என்ற ஆசை இருந்துட்டே இருக்கு. அதனைப் போலவே ஜெயலலிதா அம்மாவுடன் நான் செய்த சில விஷயங்களை என்னால் மறக்கவே முடியாது. ஊட்டியில் சூட்டிங் சென்று இருந்த சமயத்தில் நல்ல மழை பெய்துகொண்டு இருந்தது. அப்போ நானும் ஜெயலலிதா அக்காவும் ரோஜாப்பூ பறிக்கலாம் என்று சென்றோம். அவங்களுக்கு பெருசு பெருசா இருக்க ரோஜாப்பூ ரொம்ப பிடிக்கும். நம்பள யாரு கேக்க போறாங்க வாங்க போலாம் என்று அவங்கள கூட்டிட்டு போனேன்.

ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! - BBC News தமிழ்

அங்க ரோஜாப்பூ படிச்சிட்டு இருக்கும்போது எங்க அம்மா யாருன்னு கத்த நாங்க சொந்தக்காரர் தான் வந்துட்டாங்க என்று பயந்து ஓட கீழ சறுக்கி விழுந்து ரெண்டு பேருக்கும் கை கால் முட்டி எல்லாம் காயமாயிருச்சு. அந்த சம்பவத்தை இன்னும் என்னால மறக்கவே முடியாது. அதன் பிறகு சோபர் பாபு ஜெயலலிதாவை விட்டுட்டு சென்றதை என்னால மறக்கவே முடியாது. சாஸ்திரப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா அக்கா ரொம்பவும் விருப்பப்பட்டாங்க. அவங்கள பொண்ணு பாக்க வர அன்னைக்கு நாங்க எல்லோருமே அங்க இருந்தோம். அழகா வைர நெக்லஸ் ஒட்டியானம் எல்லாம் போட்டு அக்கா ரெடியாயி வந்தாங்க. அந்த சமயத்துல சோபர் பாபு போன் பண்ணி நான் கடைசி வரைக்கும் அவள நல்லா பாத்துப்பேன் ஆனா இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது நீங்களே அவ கிட்ட சொல்லிருங்க என்று சொன்னாரு.

Rumoured Relationship Between Jayalalitha & Sobhan Babu! - Filmibeat

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அக்காவுக்கு பயங்கர கோபம் வந்திருச்சு. காதுல போட்டிருந்த கம்மல் தலைமுடி எல்லாத்தையும் பிச்சு போட்டுட்டு ரூம்ல போய் கதவை சாத்திட்டு நிறைய மாத்திரை போட்டுட்டாங்க. அப்புறம் கதவை எல்லாம் உடைத்து நிறைய உப்பு தண்ணி கொடுத்து எப்படியோ அவங்கள காப்பாத்துனாங்க. அதன் பிறகு தான் எம்ஜிஆரை சந்தித்து அரசியல் தான் வாழ்க்கை என்று சினிமாவில் நுழைந்தாங்க. ஆனால் சோபர் பாபு உடன் பிரேக்கப் ஆவதற்கு முன்பே ஜெயலலிதா ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து எங்க அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காம அதை கலைச்சிட்டாங்க. எல்லோரும் சொல்ற மாதிரி ஜெயலலிதாவிற்கு குழந்தை எல்லாம் எதுவும் கிடையாது. அவங்க வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயமும் எனக்கு தெரியும் என்று குட்டி பத்மினி பேசியுள்ளார்.