இயற்கை பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. அதே அழகோடு இளமையாக இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ..!

Spread the love

பிறமொழி பட நடிகைகள் எத்தனையோ பேர் தமிழ் சினிமாவிற்குள் வந்து சென்றாலும் சிலருக்கு மட்டுமே நல்ல மார்க்கெட் கிடைத்தது. சிலர் மார்க்கெட் இல்லாமல் திரும்பி சென்று விட்டனர். அதன்படி தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை குட்டி ராதிகா. இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் ஷியாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தில் அறிமுக ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர்தான் குட்டி ராதிகா. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து விட்ட இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே உருவானது.

அதிலும் அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் நல்ல ஹிட் கொடுத்தது. காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இன்றும் உள்ளது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி வர்ணஜாலம் மற்றும் மீசை மாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கன்னடத்திற்கு திரும்பிவிட்டார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனைத் தொடர்ந்து கன்னடாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி என்பவரை ராதிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் அவர் உள்ளார். இந்த நிலையில் குட்டி ராதிகா வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தனது வீட்டில் பூஜை நடத்திய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

17 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

26 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

38 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

40 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

43 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

46 minutes ago