என் கைகளில் பொம்மை மாதிரி நீ.. நம்பவே முடியல என்னால.. மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ..

By Mahalakshmi

Updated on:

தமிழ் சினிமாவில் 80s முதல் 90s களில்  கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் தற்போதும் இன்ஸ்டாகிராமில் தனது  மகளான அவந்திகாவுக்கு  பிறந்தநாள் வாழ்த்தை   தெரிவிக்கும் விதமாக  குஸ்பு அவந்திகாவை கைக்குழந்தையாக வைத்திருந்த போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்; இவர் நடிகர் சுந்தர்சி யை திருமணம் செய்து கொண்டார். தற்போது முக்கிய கேரக்டர் உள்ள படத்தில் மட்டும் நடிக்கும் குஷ்பூ ஒரு அரசியல்  பிரமுகராக மக்களிடம் வலம் வருகிறார். இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற பெண் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து மாடல் உடை அணிந்த போட்டோவையும் ஹோம்லியாக உடை அணிந்த போட்டோ மற்றும் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வையும் பதிவிட்டு வருவார். இப்பொது, நடிகை குஸ்பு  இன்று 21 வது பிறந்தநாள் கொண்டாடும் அவந்திகாவிற்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள் கூறியும் இன்ஸ்டாகிராமில் கைக்குழந்தையாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.

இதில், அவர் என்னால் நம்பவே முடியவில்லை இப்பொழுது தான் என் கையைப் பிடித்து நடப்பது போல இருந்த என் மகள் என்னை விட பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதாகவும் அவளுக்கு  21 வயது ஆகிவிட்டது என்றும்;  நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசீர்வாதத்துடன் பதிவிட்டுள்ளார். நடிகை குஸ்பு பதிவிட்ட இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi